Nirmala Institute Of Technology (ITI)

வெல்டிங் தொழில் பிரிவு

      பொறியியல் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு மனித வாழ்க்கைக்கு இதமான சகல தொழிநுட்ப அடிப்படை வசதிகளை உருவாக்கும் முறையாகும்.. வெல்டிங் என்பது உலகத்தையும் முறையாகும் இந்த உலோக இணைப்புகளை சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு இருந்து வளர்ந்து வருகிறது ஆரம்ப காலத்தில் இது இரண்டு உலோகங்களை பழுக்க காய்ச்சி அழுத்தத்தை கொடுத்து இணைக்கப்பட்டது.

      தற்காலத்தில் தொழிலகங்களில் பல்வேறு வடிவுள்ள இயந்திர பாகங்களை தயாரிக்க பல்வேறு வகையான உலோகங்களை இணைக்க கனமான தகடுகள் மிக அதிகமான சுமைகளை ஏற்க வேண்டி இருப்பதாலும் மனித உழைப்பினாலும் வெவ்வேறு வகையான நவீன வெல்டிங் எந்திரங்கள் மூலமாகவும் வெல்டிங் செய்து தொழில்துறையில் வேகமாகவும், சிக்கனமாகவும், நேர்த்தியாகவும், குறைந்த நேரத்தில் பலமான இணைப்புகள் செய்யப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக அமைகிறது.


வெல்டிங் முக்கியத்துவம்.

      சிறப்பு உலோகங்கள் பயன்படுத்தப்படும் விண்வெளி ஓடங்கள், அணுமின் உற்பத்தி, ரயில் பெட்டி, ஆகாயவிமானம் ,கப்பல் கட்டுதல், நிலக்கரி சுரங்க தொழில் கருவிகள், வாகன தொழிற்சாலைகள், எண்ணெய் மற்றும் தண்ணீர் கொள்கலன்கள், குழாய்கள், இரும்பு வாயிற் கதவுகள், ஜன்னல் பின்னல் சட்டம், இவைகளை வெல்டிங் செய்வதன் மூலம் எளிதாகவும் குறைந்த செலவிலும் நல்ல இணைப்பு வலிமையுடனும் இணைக்கலாம். வெல்டிங் மூலம் செய்யப்பட்ட இணைப்புகளின் வலிமை 100% திறனுடன் இருக்கும். ஆகவே எல்லா பொறியியல் தொழிலகங்களின் பல்வேறு கட்டுமானங்கள் செய்ய வெல்டிங் முக்கிய பங்காற்றுகின்றது எனவே வெல்டிங் இணைப்பு தொழில் இல்லாத தொழிற்சாலைகளை இல்லை எனலாம்.


      உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு எனவே அந்த கனவோடு அந்த நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய முடியும் என்ற சிந்தனையை மாணவர்களிடையே ஊட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் எமது நிர்மலா பயிற்சி நிலையம் சிறந்த பங்காற்றி 50 ஆண்டுகளை கடந்து இன்னும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும்.


      இன்றைய மாணவர்கள் பொறியியல் உலகில் பங்காளராக புகும்போது அவர்கள் நிச்சயமாக கண்டடையும் உலக பொறியியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டும் எல்லாவிதமான விஞ்ஞானரீதியான கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை சிந்தனைகளில் வெல்டர் ஐந்து மாணவர்களின் பங்களிப்பு கண்டிப்பாக தேவை. ஆகவே மாணவர்களின் சாதனைகள் பல புரிந்தpl வாருங்கள் வாழ்த்துக்கள்.