Nirmala Institute Of Technology (ITI)

எலக்ட்ரிஷன் தொழில் பிரிவு

       இன்றைய உலகில் மின்சாரத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். மின்சாரமானது எண்ணற்ற வழிகளில் நமக்கு நன்மை விளைவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது வீட்டிற்கு வெளிச்சம் தருவது முதல் விண்வெளி ஆராய்ச்சி செய்வது வரை பயன்படுத்தப்படுகிறது. உயிர்வாழ காற்று அவசியம், அதற்காக நாம் அதைத் தேடிப் போவது இல்லை.


       நாம் தேடும் உணவு, உறைவிட தீர்ப்பின் தேடும் பொருள் மின்சாரமே மேலும், மின்சாரமானது மனிதனின் கடின உழைப்பை குறைத்து பல நவீன வசதிகளை கொடுக்க பயன்படுகிறது இதனை கருத்திற்கொண்டு இப்பயிற்சி மையத்தில் 56 ஆண்டுகளுக்கு மேலாக எலக்ட்ரிஷன் என்ற தொழில் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பிரிவில் பயிற்சியாளர்களின் பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் நிறைவாக உள்ளது.


       இப்பிரிவில் தொழிற்சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மின்சார தீ விபத்து பற்றிய பயிற்சிகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வயரிங் செய்தல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுfpw பல்வேறு வகையான மின் மோட்டார்கள், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிற பல்வேறு வகையான நவீன ஒளி அமைப்புகள், மின் உற்பத்தி நிலையத்தில் செயல்படுகிற ஜெனரேட்டர்கள், ஊர்திகளில் செயல்படுகிற பேட்டரிகள், துணை மின் நிலையங்களில் பயன்படுகிற டிரான்ஸ்பார்மH மற்றும் அதன் உபரி பாகங்களின் செயல்பாடுகள், வீட்டு மின்சாதனங்கள்; பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சிகள், வீடுகளில் பயன்படுகிற தண்ணீர் இறைக்கும் பாம்புகளை பற்றிய நுட்பங்கள், எளிய மின்னணு சாதனங்களை பற்றிய தெளிவுகள் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


       மாநில மின் வாரியம், இந்தியன் ரயில்வே, தொலைபேசி இல்லக்கா, விமான நிலையம், மற்றும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரீசியன் பணியாளர் பணி, கலையரங்கம், திரைப்பட அரங்கு, ஆகியவற்றில் உள்ள மின் சாதனங்கள் நிறுவுதல், பரிசோதித்தல் மற்றும் பராமரித்தல், பணிமனைகளில் கட்டுப்பாட்டு அறை, மின்சாதனங்களின் சுவிட்சுகள், பாதுகாப்பு சாதனங்கள் அமைத்த, மின்மோட்டார், மின்விசிறி, ஆகியவற்றிற்கு வைண்டிங் செய்தல், மின் பழுதுபார்த்தல், மின் இயந்திரங்கள் epWவுதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை பெரிய உணவு விடுதி, தங்கும் விடுதி, மருத்துவமனைகள் வீட்டு உபயோக மின் சாதனங்கள் உற்பத்தி செய்பவர்களிடம் அசெம்பிளிங் பணி செய்தல் ஆகிய வேலைகளிலும், சுய தொழிலாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மோட்டார் மற்றும் மோட்டார் ஸ்டார்டர் மற்றும் மின் சுற்றுகளில் பழுது பார்த்தலும், guhkhpத்தலும் பணிகள் மேற்கொள்ளுதல், வீட்டு ஒயரிங் மற்றும் ஒர்க்ஷாப் உயரங்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் அமைத்துக் கொடுத்தல், மோட்டார் மற்றும் கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல், மின் உபகரணங்கள் பழுது பார்த்தல் மென்பொருட்களை பெரிய அளவில் ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்தல் போன்றவற்றை தொழில் பிரிவில் பயிற்சி வழியாக மேற்கொள்ளலாம்.