Nirmala Institute Of Technology (ITI)

பிட்டர் தொழில் பிரிவு

      பிட்டர் பிரிவில் மிக நுட்பமாக அளக்கக் கூடிய அளவு கருவிகளான மைக்ரோ மீட்டர்டெப்த் மைக்ரோ மீட்டர் மற்றும் வெர்னியர் காலிப்பர் போன்ற அளவு கருவிகளை பயன்படுத்தி மிக நுட்பமாக அளவுகளில் வேலைகளை செய்யவும் சோதிக்கவும் நல்ல பயிற்சியை இப்பிரிவில் பயிலும் மாணவர்கள் பெறுகிறார்கள் கோணமான அளவுகளை 5நிமிடம் நுட்பத்திலும் கோண அளவிகளை பயன்படுத்தி ஐந்து நிமிடம் வினாடிகள் துல்லியத்திலும் நுட்பமாக அளவுகளை அழைக்கவும் சோதிக்கவும் பயிற்சி பெறுகிறான் .

      மேலும் பிட்டர் பிரிவில் வேலைகளை பல்வேறு இணைப்பு முறைகளில் இணைக்கவும் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்த்து வேலைகளை சரியாக செய்து பல்வேறு இணைப்புகளில் இணைக்கவும் இணைக்கப்பட்ட வேலைகளை சேதமின்றி பிரிக்கவும் பயிற்சி பெறுகிறான் உற்பத்தி பெருக்க வேலைகளில் பிடித்திகள் மற்றும் வழிநடத்தி களை பற்றி தெரிந்து கொள்வதுடன் வேலைக்கு தகுந்தவாறு புதிய பிடித்திகளையும் வழிநடத்தி களையும் செய்யும் ஆற்றல் பெறுகிறான் மேலும் பல்வேறு வகையான மரைகள் பாகங்கள்பற்றிய விரிவான அறிவையும் பெறுவதுடன் உள் மரைகள் மற்றும் வெளி மரைகளை கைக் கருவியை பயன்படுத்தியும் இயந்திர கருவிகளை பயன்படுத்தியும் உருவாக்கும் திறனை பெறுகிறான் இயந்திர பாக ங்களை பிரித்து சுத்தம் செய்து எண்ணெயிட்டு பழுதடைந்த பாகங்களை நீக்கிவிட்டு அதே அளவுடைய புதிய பாகங்களை அமைத்து கூட்டிணைப்பு செய்யும் திறனை பயிற்சியாளர் பெறுகிறார் மேலும் இயந்திரங்களில் சக்தி மாற்றம் செய்யக்கூடிய பட்டைகள் பற்றிய முழு அறிவையும் பெறுவதுடன் பற்சக்கர தொகுப்புகளுடன் இயந்திரங்களை இயக்கக்கூடிய தன்மையை அறிந்து கொள்கிறான் மேலும் தானியங்கி இயந்திரங்கள் பற்றிய அறிவையும் பெறுகிறான்.